தேவையானவை:
- ஆட்டுக்கறி..எலும்புடன்..............1 /4 கிலோ
- பெரிய வெங்காயம் ................. 3
- சின்ன வெங்காயம்.......................5
- பச்சை மிளகாய் நீளமானது........8
- உருளைக் கிழங்கு..தேவையானால்....3
- தக்காளி...............................................3
- மல்லி பொடி.......................................4 தேக்கரண்டி
- மஞ்சள் பொடி...................................கொஞ்சம்
- முந்திரி................................................6
- சோம்பு.................................................1 /2 தேக்கரண்டி
- கசகசா...................................................1 தேக்கரண்டி
- இஞ்சி.....................................................1 இன்ச் நீளம்
- பூண்டு....................................................10 பல்
- தேங்காய் பால்.....................................1 மூடியில் எடுத்தது / ஒரு டம்ளர்
- ஏலம்........................................................1
- பட்டை...................................................சிறு துண்டு
- கிராம்பு...................................................3
- புதினா...................................................கைப்பிடி
- கறிவேப்பிலை.மல்லி தழை..............கொஞ்சம்
- எலுமிச்சை.......................................1/2 மூடி
- எண்ணெய்.............................................3 தேக்கரண்டி
- உப்பு ....................................................... தேவையான அளவு
செய்முறை:
- கறியை சின்னதாக நறுக்கி, கொஞ்சம் உப்பு மஞ்சள் பொடி போட்டு, கறி முழுகும் வரை கழுநீர்/நீர் விட்டு,அதிலேயே முழு உருளைக் கிழங்கை கழுவி போட்டு, குக்கரில் 4 விசில் விட்டு, நன்றாக வேகவிடவும்..
- கிழங்கு வெந்தபின் அதனை தோல் உரித்துவிட்டு, கொஞ்சம் பெரிதாக நறுக்கிக் கொள்ளவும்.
- பெல்லாரியை மெலிதாக நறுக்கவும். 4 பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.
- தக்காளியையும் 8 ஆக நறுக்கவும்.
- தேங்காயை துருவி 3 முறை பால் எடுக்கவும்.
- இஞ்சி, பூண்டை நன்றாக அரைக்கவும்
- 4 பச்சை மிளகாய், முந்திரி, கசகசா, சோம்பு இவற்றை நைசாக அரைத்த பின், அத்துடன் மல்லி பொடியையும் வைத்து அரைத்துவிடவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு, சூடானவுடன், அதில் ஏலக்காயை உரித்துப் போட்டு, அத்துடன் பட்டை கிராம்பு போடவும்.
- பட்டை, கிராம்பு சிவந்தவுடன், அதில் அதில் அரைத்த இஞ்சி,பூண்டு விழுதைப் போட்டு வதக்கவும்.
- பின், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.
- அதிலேயே அரைத்த பச்சை மிளகாய்,முந்திரி விழுதை போட்டு வதக்கிய பின், மூன்றாவது தேங்காய்ப் பாலை ஊற்றவும்.போதுமான உப்பு போடவும். மஞ்சள் பொடி போடவும்.
- குழம்பில் வேகவைத்த கறி, நறுக்கிய உருளைக் கிழங்கைப் போடவும்.குழம்பு நன்கு கொதித்ததும் இரண்டாவது பாலை ஊற்றவும்.
- குழம்பு நன்றாக சுண்டியதும், மூன்றாவது பாலை ஊற்றி, புதினா,மல்லி போட்டு, அடுப்பை சிம்மில் வைக்கவும். குழம்பு நுரைத்துக் கொண்டு, கொதி வரத் தொடங்கியதும் இறக்கிவைத்து,1/2 மூடி எலுமிச்சை பிழிந்து விடவும்.


No comments:
Post a Comment