Monday, 23 May 2011

பால் தேங்காய் பர்பி

தேவையானப்பொருட்கள்:

பால் - 1 கப்
சர்க்கரை - 2 கப்
தேங்காய்த்துருவல் - 3 கப்
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

பால், சர்க்கரை, தேங்காய்த்துருவல் அனைத்தையும் ஒரு அடி கனமான வாணலியில் போட்டு, மிதமான தீயில் கெட்டியாகும் வரை கை விடாமல் கிளறவும். (15 முதல் 20 நிமிடங்களில் கெட்டியாகும்) பர்பி கெட்டியாகி உருண்டு, திரண்டு வரும் பொழுது ஏலக்காய்த்தூளைச் சேர்த்துக் கிளறவும். (விருப்பமானால் சிறிது விரும்பிய வண்ணம் மற்றும் வாசனைத் திரவியம் சேர்க்கலாம்). நெய் தடவியத் தட்டில் கொட்டி, சற்று ஆறியதும் துண்டுகள் போடவும்.



இதை மைக்ரோவேவ் அவனிலும் சுலபமாகச் செய்யலாம்.

மேற்கண்ட அளவிற்கு 10 முதல் 12 துண்டுகள் வரை கிடைக்கும். 

No comments:

Post a Comment